Published : 18 Feb 2021 03:17 AM
Last Updated : 18 Feb 2021 03:17 AM

தெலங்கானா முதல்வருக்கு இபிஎஸ், மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தெலங்கானா மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திரசேகரராவ், தனது 67-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

அவருக்கு முதல்வர் பழனிசாமி அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில், ‘‘தங்களது பிறந்த நாளானஇந்த மகிழ்ச்சியான தருணத்தில்,உங்களுக்கு என் வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து மக்கள் சேவையாற்றும் வகையில் உங்களுக்கு நல்லஆரோக்கியம் வழங்க வேண்டும்என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘தெலங்கானா முதல்வரும், மூத்தஅரசியல் தலைவருமான சந்திரசேகரராவுக்கு, திமுக சார்பில் நெஞ்சார்ந்த பிறந்ததின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நாட்டுக்கும் தெலங்கானா மாநிலத்துக்கும் அவர் பல்லாண்டுகள் சேவையாற்றிட வாழ்த்துகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x