Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM

தமிழகம் முழுவதும் 8.19 லட்சம் பேர் எழுதுகின்றனர் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3-ம் தேதி தொடக்கம் கூடுதல் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல்

(கோப்புப் படம்)

சென்னை

பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் 8.19 லட்சம் பேர் தேர்வு எழுது கின்றனர். கரோனா காரணமாக கூடுதலாக தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதி யில் நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத் தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப் பட்டன. தமிழகத்தில் ஊரடங்குக்கு முன் பாக பிளஸ் 2 பொதுத் தேர்வு மட்டும் நடத்தப்பட்டது. 1 முதல் 11-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக் கப்பட்டனர். கரோனா அச்சத்தால் நடப்பு கல்வியாண்டு பள்ளிகள் திறப்பிலும் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர் களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப் பட்டன.

இதனிடையே, நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதை அடுத்து பள்ளிகளை படிப்படியாக திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற் போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், குறைந்த கால அவகாசமே இருப்பதால் இந்த வகுப்புகளுக்கு 30 முதல் 40 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. அத்துடன் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் இருக்காது. நிச்சயம் நேரடி முறையில் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து 10, 11, 12-ம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்கள் சேகரிப்பு, மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வழக்கமாக 10, 12-ம் வகுப்புகளுக்கு மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தப் படும். தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் நடத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக மாணவர்களுக்கான பொதுத்தேர்வை மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் நடத்தலாமா என கல்வித் துறை ஆலோசித்து வந்தது. அதேநேரம் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுகள் மே இறுதியில் நடக்க உள்ளன. எனவே, மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை மே முதல் வாரத்திலேயே தொடங்க முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி நேற்று வெளியிட்ட அறிவிப் பில், ‘பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு காலஅட்டவணை வெளி யிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் மே 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடத்தப்படும். தேர்வுகள் காலை 10 முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும். தேர் வின்போது மாணவர்கள் வினாத்தாளை படிக்க 10 நிமிடம், விடைத்தாளில் விவரங் களை எழுத 5 நிமிடம் தரப்பட்டுள்ளன’ என கூறப்பட்டுள்ளது.

மே மாத இறுதியில் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்கவும், ஜூன் மாதத்தில் முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 8.19 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். கரோனா காரணமாக வழக் கத்தைவிட கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதுச்சேரியில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதவுள்ளனர். சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 11-ம் தேதி வரை நடத் தப்பட உள்ளது குறிப் பிடத்தக்கது.

10-ம் வகுப்பு தேர்வு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையும் தயார் செய்யப்பட்டு விட்டது. அரசின் அனுமதி பெற்று விரை வில் அட்டவணை வெளியிடப்படும் என வும், சுமார் 10 லட்சம் மாணவ, மாணவி கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுத உள்ள தாகவும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணைநாள்பாடம்மே 03மொழிப்பாடம்மே 05ஆங்கிலம்மே 07தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ், அரசியல் அறிவியல், புள்ளியியல், மனை அறிவியல்,மே 11இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்மே 17கணிதம், விலங்கியல், வணிகவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, நர்சிங், ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, விவசாய அறிவியல், நுண்ணுயிரியல்மே 19உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், தொழிற்கல்வி படிப்புகள்மே 21வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x