Published : 18 Feb 2021 03:19 AM
Last Updated : 18 Feb 2021 03:19 AM

புதுச்சேரி சட்டப்பேரவையை கூட்டி காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் ஆளுநர் மாளிகையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டாக மனு

புதுச்சேரி காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையைக் கூட்ட உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சியினர் ஒன்றாகஇணைந்து ஆளுநர் அலுவலகத் தில் மனு அளித்தனர். இதில், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 14 பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல் ஏக்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகிய 4 பேரும் பதவிவிலகியுள்ளனர். இதில் இருவர் அமைச்சர் பதவிகளையும் ராஜி னாமா செய்துள்ளனர்.

எம்எல்ஏக்கள் பதவி விலகலால் புதுவை சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பலத்தை இழந்துள்ளது. ஆளும்கட்சியான காங்கிரஸ் கூட்டணி, எதிர்கட்சிகள் 14 எம்எல்ஏக் கள் என சம பலத்துடன் உள்ளன. தற்போது சட்டப்பேரவையில் உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் 15 எம்எல்ஏக்கள் இருந்தால்தான் பெரும்பான்மை கிடைக்கும்.

பெரும்பான்மை இழந்த காங் கிரஸ் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால்முதல்வர் நாராயணசாமி, தங்க ளுக்கு பெரும்பான்மை உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை எதிர்கட்சிதலைவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெயபால், செல்வம்,திருமுருகன், சந்திர பிரியங்கா, சுகுமாரன், கோபிகா, அதிமுக சட்ட மன்ற கட்சித்தலைவர் அன்பழகன், எம்எல்ஏக்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், பாஜக நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், செல்வகணபதி, தங்கவிக்ரமன் ஆகிய 14 பேரும் ஆளுநர் மாளி கைக்கு சென்றனர்.

அங்கு ஆளுநரின் சிறப்பு செய லர் தேவநீதிதாஸ் முன்னிலையில் 14 எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டு, சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடக்கோரி மனு அளித்தனர்.

மனு அளித்த பின் எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி கூறுகையில், "புதுவையை ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால், இந்த அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. தார்மீக அடிப்படையில் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். தற்போது புதுவை சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி ஆளுநர்அலுவலகத்தில் மனு அளித் துள்ளோம்" என்று தெரிவித்தார்.

அடுத்துக் கட்டமாக என்ன நடக்கும் என்று சட்டப்பேரவை வட்டாரங்களில் விசாரித்தபோது, " இன்று பொறுப்பேற்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை இந்த மனு மீது அடுத்தகட்ட உத்தரவை பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகப்பட்சமாக 48 மணி நேர கெடு அளித்து புதுவை சட்டப்பேரவையை கூட்டி பெரும் பான்மையை நிரூபிக்க சபாநாய கருக்கு உத்தரவிடுவார். இதன்பின் சபாநாயகர் சபை கூடும் தேதி, வாக்கெடுப்பு நடத்தும் நேரம் ஆகியவற்றை அறிவிப்பார். இதில் பெரும்பான்மையை நிரூபித்தால் காங்கிரஸ் அரசு தப்பிக்கும், இல்லாவிட்டால் ஆட்சியை இழக் கும் என தெரிகிறது." என்று குறிப் பிடுகின்றனர்.

இந்த ஆட்சி முடிய சில நாட்களே இருக்கும் தருணத்தில், நடைபெறும் இந்த அரசியல் களேபரத்திற்கு புதுவை மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x