Published : 18 Feb 2021 03:19 AM
Last Updated : 18 Feb 2021 03:19 AM

தேனி எல்லையில் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு

மதுரையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற 4-வது கட்ட பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கினார். பின் னர் நேற்று இரவு தேனி மாவட் டத்துக்கு வந்தார்.

மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதி யில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன். உயர்மட்டச் செயற்குழு உறுப் பினர் மூக்கையா, தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கம்பம் செல்வேந்திரன். தீர்மானக்குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், மகாராஜன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேனியில் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நகர் பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x