Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM

வேளாண் சட்டங்கள் விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டில் மாற்றம் ஏன்? மக்களவையில் ராகுல் காந்தியிடம் நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி

மக்களவையில் நேற்று பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி

இந்தியாவின் இறுதி நாளை எழுதும் மனிதராக ராகுல் காந்தி மாறிவருகிறார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.

நேற்று மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அவர் மேலும் கூறியதாவது:

இந்திய அரசியல் அமைப்பையும், அதை செயல்படுத்தும் அர சையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் வேலையை ராகுல்காந்தி மேற் கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக நடை முறையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பட்ஜெட் குறித்து பேசாமல் வேளாண் துறை யில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்கள் குறித்து பேசினார். அவரது பேச்சை பார்க்கும்போது நாளையே இறுதித் தீர்ப்பு எழுதப்படும் மனிதராக அவர் மாறிவருவது போல் உள்ளது.

பட்ஜெட் குறித்து பேசாமல் போவதும், அது குறித்த விவா தத்தில் பங்கேற்காமல் இருப்பதற் கான காரணமும் புரியவில்லை.

ராகுல் காந்தி 10 பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு பிரச்சினையைக் கூட அவர் பேச வில்லை.

வேளாண் சட்டங்கள் மீது காங்கிரஸ் கட்சி எதிர்மறையான நிலைப்பாட்டை ஏன் எடுத்துள்ளது என்றே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி அவர்கள் ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் விவசாயக் கடன்கள் ஏன் தள்ளுபடி செய்யப்பட வில்லை.

காங்கிரஸ் ஆட்சிபுரியும் பஞ் சாப் மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினையை ராகுல் காந்தி ஏன் பேசவில்லை, அங்கு வைக்கோல் எரிக்கப்படுவது குறித்து அவர் கருத்து ஏதும் தெரிவிக்காதது ஏன்?

விவசாயிகளுக்கு எதிராக புதிய வேளாண் சட்டத்தில் எந் தெந்த பிரிவுகள் உள்ளன என்ற விவரத்தை தெரிவிக்கவே யில்லை. முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், வேளாண் உற்பத்தி சந்தை குழு (ஏபிஎம்சி) சீர்திருத்தம் குறித்து வெளியிட்ட கருத்துகள் குறித்து ராகுல் காந்தி கருத்து எதையும் தெரிவிக்கவேயில்லை.

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குபவர்களை இழிவு படுத்துவது ராகுலுக்கு புதிதல்ல. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கொண்டு வந்த அவசர சட்டத்தை கிழித் தெறிந்தவர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x