Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில் ‘ஃபிட்ஜி ஃபார்சுனேட் 40’ பயிற்சி பிப்.21-ம் தேதி நுழைவுத் தேர்வு

‘ஃபிட்ஜி ஃபார்சுனேட் 40’ பயிற்சியின் மூலம் ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய குழந்தைகளை நாளைய பங்களிப்பாளர்களாக உருவாக்குவதே ஒரு சமூகத்தின் தலையாய கடமை. அவ்வாறு செய்யத் தவறும் சமூக அமைப்பு ஆக்கப்பூர்வமான சமூக ஆற்றலைஇழந்து விடுகிறது. இளம் சமூகத்தினருக்குத் தரமான கல்வியையும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவாய்ப்புகளையும் அளிக்கும் சமுதாயம் சிறந்து விளங்குமென்பது யாரும் மறுக்க முடியாது.

இந்தியாவில் IIT, NIT, IISC போன்ற கல்வி நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் உதவித் தொகை அளிக்கும் KVPY, NTSE போன்ற தேர்வுகளிலும் பல மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். போதிய பயிற்சியின்மை மற்றும் பொருளாதார காரணங்களால் புகழ் பெற்ற இந்தகல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களால் சேர முடிவதில்லை.

இதற்குத் தீர்வு காணும் வகையில், ‘ஃபிட்ஜி ஃபார்சுனேட் 40’ என்ற பயிற்சியின் மூலம் ஏழை மாணவர்களும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு சாதனை புரிய வழிவகுத்துள்ளது.

ஆயிரம் ரூபாய்க்கு குறைவானமாத வருமானம் பெறும் பெற்றோரின் 9 மற்றும் 11 ம் வகுப்புகளில் பயிலும் பிள்ளைகளுக்கு ‘ஃபிட்ஜி ஃபார்சுனேட் 40’ 100 சதவீதம் இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளது. இப்பயிற்சி வகுப்புக்கான தங்குமிட வசதியும் இலவசமாகவே வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியின் கீழ் நடத்தப்படும் வகுப்புகள் ஒவ்வொன்றிலும் அதிகபட்சமாக 40 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதில் சேர விரும்பும் மாணவர்கள் பிப்.21-ம் தேதி நடைபெறவுள்ள நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இதில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு 100 சதவீத உதவித் தொகையோடு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை அளிப்பதில் ‘ஃபிட்ஜி’யின் முடிவேஇறுதியானது. விருப்பமுள்ள வர்கள் இப்பயிற்சி வகுப்புகளில்சேர உடனடியாக தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x