Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM

இந்திய முஸ்லிம் என்பதில் பெருமை கொள்கிறேன் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பேச்சு

புதுடெல்லி

நான் ஒரு இந்திய முஸ்லிம் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

மாநிலங்களவை எம்.பி.யானகுலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் நிறைவடையவுள்ளது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்பி குலாம் நபிஆசாத் மாநிலங்களைவையில் நேற்று உணர்ச்சிபூர்வமாக உரை யாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். அங்குள்ள சூழ்நிலைகளை பற்றிநான் கேள்விப்பட்டபோது ஒரு இந்திய முஸ்லிமாக நான் பெருமை கொள்கிறேன். தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஒழிய வேண்டும் என்பதே எனது விருப்பம். எல்லையைக் காக்கும் வீரர்கள் நாட்டுக்காக உயிரிழப்பது எப்போது முடிவுக்கு வரும்?

இந்தியாதான் சொர்க்கம் என்றுநான் எப்போதும் உணர்கிறேன். நான் நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு பிறந்தவன். உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வசிக்கும் முஸ்லிம் சமுதாயத்தினர் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு வருகின்றனர்.

ஆனால் இந்திய முஸ்லிம்கள் அப்படி இல்லை.அவர்கள் ஒன்றாகவே ஒற்றுமையுடன் வசித்து வருகின்றனர். தொடர்ந்து ஒற்றுமையுடன் இந்தியாவில் அவர்கள் வசிப்பர்.

மாநிலங்களவையில் நான் திறம்பட பணியாற்ற உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சக எம்.பி.க்களுக்கும் எனது நன்றி. நான் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ராஜீவ் காலத்திலிருந்தே பணியாற்றி வருகிறேன். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து நான் ஏராளமாக கற்றுக்கொண்டேன். பாஜகவுடன் பேச வேண்டாம் என்றும், முன்னாள்பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயுடன் பேசலாம் என்றும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எனக்கு அறிவுறுத்தியதை என்னால் எப்படி மறக்க முடியும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயும்எனக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய தலைவர்களில் ஒருவராகஇருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக எப்படி செயல்படவேண்டும் என்பதை நான் வாஜ்பாயிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன். அவரைப் பார்த்துஇந்தப் பணியை எப்படி எளிமையாகச் செய்வது என்பதை புரிந்து கொண்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x