Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM

கோவையில் வரும் 27-ம் தேதி மூத்தோர் தடகளப்போட்டிகோவை: கோவை மாவட்ட மூத்தோர் தடகளச் சங்கத் தலைவர் ஜோசப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள தேர்வு போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கில் வரும் 27-ம் தேதி நடக்கிறது

கோவையில் வரும் 27-ம் தேதி மூத்தோர் தடகளப்போட்டி

கோவை: கோவை மாவட்ட மூத்தோர் தடகளச் சங்கத் தலைவர் ஜோசப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள தேர்வு போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கில் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதில் 30 முதல் 100 வயது வரையுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்படுவோர், சேலம்மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில் மார்ச் 27, 28-ம் தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர். இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர், தங்களது அடையாளச் சான்றிதழுடன், அனைத்து வேலைநாட்களிலும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நேரு விளையாட்டு அரங்கில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 94425-31042 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x