Published : 08 Feb 2021 03:10 AM
Last Updated : 08 Feb 2021 03:10 AM

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

கோவை கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 6-வது டிவிஷன் கிரிக்கெட் போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. அதில், நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிளப், ரெய்ன் டிராப்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 46 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நவீன்குமார் 67 ரன்களும், நவீன்ராஜ் 57 ரன்களும் எடுத்தனர். ரெய்ன் டிராப்ஸ் அணி வீரர் பாலசெந்தில்குமார் 37 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மொத்தம் 247 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய ரெய்ன் டிராப்ஸ் அணி 42.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 200 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக ஷங்கர் 50 ரன்களும், சிவக்குமார் 35 ரன்களும் எடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x