Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

காஜிபூர் எல்லையில் விவசாயிகளை சந்திக்க சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம் மோசமான சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை சந்திப்பதற்காக நேற்று காஜிபூர் பகுதிக்கு சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன், சு.வெங்கடேசன், ஹர்சிம்ரத் கவுர், சுப்ரியா சுலே உள்ளிட்டோர்.படம்: பிடிஐ

புதுடெல்லி

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் காஜிபூர் எல்லையில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனிடையே, அங்கு மிகவும் மோசமான சூழல் நிலவி வருவதாக எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி யில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவ சாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதில், 300-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 80-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி சனிக்கிழமை (நாளை) டெல்லியை நோக்கி பேரணி நடத்தப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன.

இதையடுத்து, போராட்டக் களங்களான காஜிபூர், திக்ரி, சிங்கு ஆகிய எல்லைகளில் போலீஸார் கான்கிரீட் தடுப்புகளை அமைத் துள்ளனர். இதுதவிர, டெல்லிக்குள் விவசாயி கள் நுழைவதை தடுப்பதற்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டும், இரும்பு முள் வேலிகள் அமைக்கப்பட்டும் இருக் கின்றன.

இது தொடர்பான வீடியோக்களும், புகைப் படங்களும் சில தினங்களுக்கு முன்பு ஊடகங் களில் வெளியாகி சர்வதேச நாடுகளின் கவ னத்தை ஈர்த்தன. இந்தியாவில் ஜனநாயகத் துக்கு விரோதமான முறையில் விவசாயிகள் நடத்தப்படுவதாக வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் சென்றது.

இந்நிலையில், விவசாயிகளின் நிலை மையை நேரில் காண்பதற்காக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) உட்பட 10 எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.பி.க்கள் நேற்று காலை காஜிபூர் எல்லைக்குச் சென்றனர்.

திமுகவின் கனிமொழி, திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவள வன், ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன், தேசியவாத காங் கிரஸின் சுப்ரியா சுலே, சிரோமணி அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் உள் ளிட்ட 15 எம்.பி.க்கள் இதில் இடம்பெற்றிருந் தனர். எல்லையில் போலீஸாரால் அமைக்கப் பட்டிருக்கும் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட எம்.பி.க்கள், விவசாயிகளை சந்திப்பதற்காக சென்றனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களை காட்டி, அவர்களை போலீஸார் அனுமதிக்க மறுத்து விட்டனர்.

இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறும்போது, ‘‘ஆணிகள், முள் வேலிகள், தடுப்புச் சுவர்கள் ஆகியவற்றை பார்க்கும் போது இது டெல்லி எல்லையா அல்லது பாகிஸ்தான் எல்லையா என சந்தேகம் வருகிறது. ஜனநாயக வழியில் போராடி வரும் விவசாயி களை அரசு இவ்வாறு நடத்தலாமா? இது அப் பட்டமான மனித உரிமை மீறல். டெல்லிக்குள் நமது சொந்த மக்கள் வருவதற்கு அரசாங்கம் தடை விதிப்பதை ஏற்க முடியாது’’ என்றார்.

எஸ்ஏடி கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் கூறும்போது, ‘‘கான்கிரீட் சுவர்கள், இரும்பு வேலிகள் ஆகியவற்றுக்குள் நமது விவசாயி கள் இருப்பதை பார்க்க முடியவில்லை. ஒரு அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட இங்கு வர முடியாது. மிகவும் மோசமான சூழலில் விவசாயிகள் உள்ளனர். விவசாயிகள் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேசு வதற்கு எங்களுக்கு அனுமதி மறுக்கப்படு கிறது. எனவேதான், இங்கு என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக நேரில் வந்தோம். இங்கு நடக்கும் அராஜகங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x