Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM

அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்பிபி, மருத்துவர் வி.சாந்தாவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்த நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு

அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மருத்துவர் வி.சாந்தா ஆகியோர் மறை வுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாள் அவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை யாற்றினார். இதையடுத்து நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பிப்.5-ம் தேதி வரை ஆளுநர் உரை மீது விவாதம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, முதல்நாள் பேரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மறைந்த உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி வரை மறைந்த 22 சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் ப.தனபால் வாசித்தார்.

வீ.சந்திரன் (சிவகங்கை), சு.சிவராஜ் (ரிஷிவந்தியம்), மா.மீனாட்சி சுந்தரம் (வேதாரண்யம்), ஜி.பி. வெங்கிடு (கோபிசெட்டிப்பாளை யம்), இரா.அரிக்குமார் (பெரண மல்லூர்), கே.சி.கருணாகரன் (சிங்காநல்லூர்), பா.மனோகரன் (சிவகங்கை), பி.வெற்றிவேல் (ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர்), லி.அய்யலுசாமி (கோவில் பட்டி), பி.முகமது இஸ்மாயில் (பத்மனாபபுரம்), வி.தண்டாயுத பாணி (குடியாத்தம்), எஸ்.அக்னிராஜூ (திருப்பரங்குன்றம்), சொ.ந.பழனிசாமி (அவிநாசி), வி.சிவகாமி (தாராபுரம்), ஏ.டி.செல்லச்சாமி (ஒட்டன்சத்திரம்), எஸ்.ஆர்.ராதா (கும்பகோணம் மற்றும் மதுரை கிழக்கு), எஸ்.மணி (வெங்கலம்), கே.ஏ.மணி (கபிலர்மலை), டி.யசோதா (பெரும்புதூர்), ப.வெ.தாமோ தரன் (பொங்கலூர்), இரா.சண்முகம் (திருத்தணி), மு.பழனி வேலன் (நாமக்கல்) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் வாசித்தார். மறைந்த உறுப்பினர்களின் குடும் பத்தினருக்கு பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலும் அனுதாபமும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் அமைதி காத்து, மறைந்த உறுப் பினர்களுக்கு மரியாதை செலுத் தினர்.

அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி உடல்நலக்குறைவால் மறைந்த பாபநாசம் தொகுதி உறுப்பினரும், வேளாண்துறை அமைச்சருமான இரா.துரைக்கண்ணு, கடந்த செப். 25-ம் தேதி மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜனவரி 19-ம் தேதி மறைந்த அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவரும் உலகப்புகழ் பெற்ற புற்றுநோய் நிபுணருமான வி.சாந்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை பேரவைத் தலைவர் பி.தனபால் வாசித்தார்.

அப்போது பேரவைத் தலைவர் பேசியதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் இருந்து 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பாக மக்கள் பணியாற்றியதுடன் 2016-ம் ஆண்டு முதல் வேளாண் துறை அமைச்சராக திறம்பட பணியாற்றி யவர் இரா.துரைக்கண்ணு. விவ சாயக் குடும்பத்தில் பிறந்த இவர், எளிமையும் இனிய பண்பும் தன்னகத்தே கொண்டவர். கட்சிப் பாகுபாடின்றி பழகி, அனைவரின் அன்பையும் பாராட்டுதலையும் பெற்றவர்.

மக்களை கவர்ந்த பாடகர்

தேனினும் இனிமையான குர லால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த பிரபல திரைப்பட பாட கரும் நடிகரும் எஸ்.பி.பி. என எல்லோராலும் அன்புடன் அழைக் கப்படுபவருமான எஸ்.பி.பால சுப்பிரமணியம், 16-க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தவர். கலைமாமணி விருது, தேசிய விருது, பல மாநில விருதுகள், மத்திய அரசின் பத்மபூஷன், பத்ம போன்ற விருதுகளையும் பெற்றவர். இந்த ஆண்டின் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக் கப்பட்ட பெருமைக்குரியவர்.

உலகப் புகழ் பெற்ற புற்று நோயியல் நிபுணரும் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவருமான மருத்துவர் வி.சாந்தா, புற்றுநோய் பாதித்த ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும், புற்றுநோய் தொடர் பான பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிப்புகளை ஊக்கு விக்கவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

மருத்துவ துறைக்கு இழப்பு

இவரது மகத்தான சேவை யைப் பாராட்டி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2013-ம் ஆண்டில் இவ ருக்கு அவ்வையார் விருது வழங்கி சிறப்பித்தார். பத்ம, பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய உயரிய விருதுகளை மத்திய அரசு இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது. உலகப்புகழ் பெற்ற மகசேசே விருதும் பெற்றவர். மருத்துவர் சாந்தாவின் மறைவு மருத்துவத் துறைக்கும் தமிழகத்துக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

இவ்வாறு இரங்கல் தீர்மானங் களை பேரவைத் தலைவர் வாசித்தார்.

அதன்பின், இரங்கல் தீர் மானத்தை நிறைவேற்றும் வித மாக உறுப்பினர்கள் சிறிது நேரம் அமைதி காத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, சட்டப் பேரவைக் கூட்டம் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இன்றும் நாளையும், பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் மற்றும் முதல்வரின் பதிலுரை இடம்பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x