Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

யானைகள் வழித்தட ஆய்வு குழுவுக்கு புதிய உறுப்பினர் நியமனம்

உதகை: நீலகிரி மாவட்டம் மசினகுடி கோட்டம் சீகூர் வனப் பகுதியில் யானைகள் வழித்தடம் குறித்து அரசு வெளியிட்ட வரைபடம் தொடர்பான வழக்கில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் மூன்று நபர் விசாரணைக் குழுவை அமைத்து கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இக்குழுவில் தேசிய யானைகள் பாதுகாப்பு திட்ட தொழில்நுட்பக் குழு உறுப்பினர் அஜய் தேசாய் மற்றும் தேசிய வன உயிரின வாரிய முன்னாள் உறுப்பினர் பரவீன் பார்கவா ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர். இக்குழுவின் அலுவலகம், உதகை ஜிம்கானா கிளப் சாலையில் உள்ள வனவியல் விரிவாக்க அலுவலகக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.இந்நிலையில்,அஜய் தேசாய் கடந்தாண்டு நவம்பர் மாதம் உயிரிழந்தார். இதனால், அவருக்கு மாற்றாக தற்போது அசாமை சேர்ந்த நந்தித்தா ஹசாரிக்காவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் வட கிழக்கு மாநிலங்களில் குள்ள காட்டுப்பன்றிகளை பாதுகாக்க செயல்பட்டு வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x