Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

அடிக்கடி விபத்துகள் நிகழும் தொப்பூர் கணவாயில் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுரை

அடிக்கடி விபத்துகள் நிகழும் தொப்பூர் கணவாய் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கவனமாக வாகனங்களை இயக்கும்படி சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி தருமபுரி மாவட் டத்தில் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் காடுசெட்டிப்பட்டி பகுதியில் ஓசூர்-தருமபுரி மாநில நெடுஞ்சாலையில் உள்ள காவல் சோதனைச் சாவடி பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தினமும் காய்கறி, பழம், மலர் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்கள் 200-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இதுவரை நடந்த விபத்துகள் தொடர்பான தொகுப்பு குறும்படம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு காண்பிக் கப்பட்டது. மேலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. அடிக்கடி விபத்துகள் நிகழும் தொப்பூர் கணவாய் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கவனமாக வாகனங்கள் இயக்கும்படி வாகன ஓட்டுநர் களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப் பட்டது.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன், பாலக்கோடு பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் முனுசாமி மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி தருமபுரியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

நெடுஞ் சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் தனசேகரன் வழிகாட்டுதலில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. பேரணியை உதவிக் கோட்டப் பொறியாளர் குலோத்துங்கன் தொடங்கி வைத்தார்.

தருமபுரி 4 முனை சாலையில் தொடங்கிய பேரணி அரசு மருத்துவக் கல்லூரி சாலை விநாயகர் கோயில் வழியாக சென்று பெரியார் சிலை அருகில் நிறைவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x