Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM

கரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க வேண்டும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை

மாவட்ட சுகாதாரத் துறை இணைஇயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தடுப்பூசி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசுடன் தொடர்ந்து காணொலி முறையில் தமிழக சுகாதாரத் துறை ஆலோசித்து வருகிறது. சில அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியுள்ளது. அவற்றை மாவட்ட அளவில் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

தடுப்பூசி மையங்களை விரிவுபடுத்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராமப்புறங்களில் பகுதி வாரியாகதலா ஒரு மையமும், நகர்ப்புறங்களில் மண்டலவாரியாக தலா ஒரு மையமும் அதிகரிக்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நாளொன்று தலா 500 முதல் ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்துவதை உறுதிபடுத்த வேண்டும். மாவட்ட மருத்துவமனைகளில் அந்த எண்ணிக்கையை 400 ஆக அதிகரித்தல் அவசியம்.

கோவின் செயலியில் அதுதொடர்பான தரவுகள் உரிய முறையில் பதிவேற்றப்பட்டு அவற்றை கண்காணிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x