Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

குடியரசு தினத்தையொட்டி 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு எஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷண் சாலமன் பாப்பையா, பாம்பே ஜெய, டாக்டர் திருவேங்கடத்துக்கு பத்ம

குடியரசுத் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மறைந்த பிர பல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத் துக்கு பத்ம விபூஷண் விருதும், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, பாடகி பாம்பே ஜெய, 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் ஆகியோருக்கு பத்ம விருதும் வழங்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார் பில் ஆண்டுதோறும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம விருதுகள் வழங் கப்படுகின்றன. குடியரசு தினத்துக்கு முந்தைய தினம் பத்ம விருதுகள் அறி விக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன.

7 பேருக்கு பத்ம விபூஷண், 10 பேருக்கு பத்ம பூஷண், 102 பேருக்கு பத்ம உட்பட மொத்தம் 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 29 பேர் பெண்கள். 10 பேர் வெளிநாட்டினர். ஒருவர் திருநங்கை ஆவர்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிர மணியம், கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவர் பெல்லி மோனப்பா ஹெக்டே, அமெரிக்காவைச் சேர்ந்த மறைந்த விஞ்ஞானி நரேந்தர் சிங் கபானி, டெல்லியைச் சேர்ந்த ஆன்மிக வாதி மவுலானா வாகித்அடின் கான், தொல்லியல் ஆய்வாளர் பி.பி.லால், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் சுதர்சன் கலை கிராமத்தை உருவாக் கிய சுதர்சன் சாஹோ ஆகிய 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா (கலை), அசாம் முன்னாள் முதல்வர் மறைந்த தருண் கோகோய் (பொது விவகாரம்), கர்நாட காவைச் சேர்ந்த சந்திரசேகர் கம்பாரா (இலக்கியம், கல்வி), மக்களவை முன்னாள் தலைவர் சுமித்ரா மகாஜன் (பொது விவகாரம்), உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நிருபேந்திர மிஸ்ரா (குடிமைப் பணி), மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் (பொது விவகாரம்), மறைந்த குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் (பொது விவகாரம்), உத்தர பிரதேசத் தைச் சேர்ந்த மறைந்த கல்பி சாதிக் (ஆன்மிகம்), மகாராஷ்டிராவை சேர்ந்த தொழிலதிபர் ரஜினிகாந்த் தேவிதாஸ் ஷெராப் (வணிகம், தொழில்), ஹரியாணாவை சேர்ந்த முன்னாள் எம்.பி. தர்லோசான் சிங் (பொது விவகாரம்) ஆகிய 10 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த பி.அனிதா (விளையாட்டு), வில்லுப்பாட்டு கலை ஞர் சுப்பு ஆறுமுகம் (கலை), பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா (இலக்கியம், கல்வி, இதழியல்), பாப்பம்மாள் (வேளாண்மை), பாம்பே ஜெய ராம்நாத் (கலை), மறைந்த கே.சி.சிவசங்கர் (கலை), சுப்புராமன் (சமூக சேவை), மறைந்த தொழிலதிபர் பி.சுப்பிரமணியம் (வணிகம், தொழில்), சென்னையைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் (5 ரூபாய் டாக்டர்), தொழிலதிபர் தர் வேம்பு (வணிகம், தொழில்), புதுச்சேரியை சேர்ந்த கேசவசாமி (கலை) உட்பட 102 பேருக்கு பத்ம  விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பின்னர் வழங்குவார்.

மெரினாவில் ஆளுநர் இன்று கொடியேற்றுகிறார்

தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தேசியக் கொடியை ஏற்றிவைக்கிறார். வீரதீர செயல்களுக்கான விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.

நாட்டின் 72-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொடிக் கம்பத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர், முப்படை வீரர்கள், காவல் துறையினர் பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்கிறார்.

அதைத் தொடர்ந்து, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், மதுவிலக்கு அமலாக்கத்துக்கான காந்தியடிகள் காவலர் பதக்கம், திருந்திய நெல் சாகுபடிக்கான வேளாண்மைத் துறையின் சிறப்பு விருது ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.

அதைத் தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடக்கிறது. வழக்கமாக, குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் விழாவில் பங்கேற்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தபடியே குடியரசு தின நிகழ்ச்சிகளை மக்கள் தொலைக்காட்சியில் கண்டுகளிக்கும்படி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அவரவர் வீட்டிலேயே மரியாதை செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தன்று வழக்கமாக நடக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவையொட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x