Published : 25 Jan 2021 03:15 AM
Last Updated : 25 Jan 2021 03:15 AM

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி நலத்திட்ட உதவி

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆட்சியர் க.விஜயகார்த்தியேன் தலைமை வகித்தார்.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் கூறும்போது, "ஆசிய அளவில் வேறு எங்கும் இல்லாத வகையில், 1000 ஏக்கர் பரப்பில் சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் உடுமலையை அடுத்த பண்ணைக்கிணறு பகுதியில் ரூ.82.13 கோடி செலவில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைய அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் நலன் காக்க விலையில்லா ஆடு, கறவை பசு, நாட்டுக்கோழி குஞ்சு விநியோகிக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார். 2,412 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் , ஆட்சியர் ஆகியோர் பங்கேற்றஇந்நிகழ்ச்சிக்காக ஆளுயுர பேனர் வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின்போது, அந்த பேனர் திடீரென சரிந்து விழுந்தது. அருகே இருந்த மக்கள் அதனை தாங்கி பிடித்துக்கொண்டதால், விழாவில் பங்கேற்றவர்கள் மீது விழாமல் பாதுகாக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x