Published : 25 Jan 2021 03:15 AM
Last Updated : 25 Jan 2021 03:15 AM

மரகதப் பூங்கா வளாகத்தில்பாரம்பரிய கிராமிய நடனங்கள்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் பல்லவர்கால கலைச்சின்ன வளாகங்கள் கரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்ததால், சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி காணப்பட்டது. இந்நிலையில், அரசின் படிப்படியான தளர்வுகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக மீண்டும் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனினும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சுற்றுலாத் துறை சார்பில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மரகதப் பூங்கா வளாகத்தில், கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், மரகதப் பூங்கா வளாகத்தில் வார இறுதி கலாச்சார விழா நேற்று முன்தினம் செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்வம் தொடங்கி வைத்தார். இதில், திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கலைக்குழுவினர் பாரம்பரிய கிராமிய நடனங்கள் மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்டவற்றை அரங்கேற்றினர். சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர். இதில், சுற்றுலாத் துறை அலுவலர் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x