Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM

தொட்டுத் தொடரும்ஆசிரியர்-மாணவ உறவு

இந்த நாட்களில், தமிழகத்தின் கல்விப் புலங்களில் ஆசிரியர்-மாணவர் உறவு இன்றும் போற்றத்தக்க வகையில் நீடித்துவருவதைச் சொல்வதாக அமைந்திருக்கிறது ‘மணற்கேணி’ ஆய்விதழ் ஒருங்கிணைக்கும் ‘எனது நெறியாளர்’ இணையவழி உரைத் தொடர். நமது சமகாலத்து அறிவாளுமைகளில் ஒருவர், தனது ஆய்வு நெறியாளர் பற்றி உரை நிகழ்த்த, அவரைப் பற்றி அவரது வழிகாட்டலின் கீழ் ஆய்வுசெய்த அடுத்த தலைமுறை ஆய்வாளரும் உரைநிகழ்த்துவதாக இந்த உரைத்தொடர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எம்.சூரியநாராயணா, டி.ராமச்சந்திரா-பக்தவத்சல பாரதி- த.விவானந்தராசா; தி.சு.நடராசன்- அ.ராமசாமி- நா.ஜிதேந்திரன்; தே.லூர்து-நா.இராமச்சந்திரன்-ஜே.ஜோசப் அந்தோணிராஜ்; ஆ.இரா.வேங்கடாசலபதி - ஜெ.பாலசுப்பிரமணியன்- ர.அகிலா லெட்சுமி என்று இந்த ஆசிரியர்-மாணவர் சங்கிலி தொடர்கிறது. ஜனவரி 23 அன்று தொடங்கி பிப்ரவரி 2 வரை தினந்தோறும் மாலை 7 மணிக்கு இந்த உரைத்தொடர் நடைபெற உள்ளது. ஆய்வுப் பரப்பில் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் பற்றிய பதிவாகவும், ஆய்வுச் சூழல் அறிமுகமாகவும் இது அமையும் என்கிறார் ‘மணற்கேணி’ ஆய்விதழின் ஆசிரியர் ரவிக்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x