Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 03:17 AM

‘டிராகன் ப்ரூட்’ பழத்துக்கு கமலம் பெயர் சூட்டியது குஜராத்

சீனாவை பூர்வீகமாக கொண்டிருக்கும் டிராகன் ப்ரூட் பழங்கள் குஜராத்தில் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

இதனிடையே, ‘டிராகன் ப்ரூட்’என்ற வெளிநாட்டு பெயரின் காரணமாக இந்தப் பழங்கள் பெரும்பாலான மக்களிடம் இன்னும் சென்றடையவில்லை. இதனால், இந்த பழங்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு அதிகளவில் லாபம் கிடைப்பதில்லை எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், குஜராத் அரசு,‘டிராகன் ப்ரூட்’ என்ற பெயரை ‘கமலம்’ என மாற்றி நேற்று முன்தினம் அறிவித்தது. இதுகுறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், “டிராகன் ப்ரூட் தாமரை போல இருப்பதால் அதன்சம்ஸ்கிருத பெயரான ‘கமலம்’ என்பதையே புதிய பெயராக சூட்டியிருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x