Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 03:17 AM

8 மாநில விவசாய சங்கங்களுடன்உச்ச நீதிமன்ற நிபுணர் குழு பேச்சுவார்த்தை

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தமிழகம் உட்பட 8 மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து அண்மையில் உத்தரவிட்டது. மேலும், விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக 4 பேர் அடங்கிய நிபுணர் குழுவையும் அமைத்தது.

இந்நிலையில், இந்தக் குழுவினர் விவசாயிகளுடனான தங்கள் பேச்சுவார்த்தையை நேற்று தொடங்கினர். முதல்கட்டமாக தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, கேரளா ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களுடன் காணொலிக் காட்சி மூலமாக இக்குழுவினர் உரையாடினர்.

அப்போது, புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக இருதரப்பும் சுமார் 2 மணி நேரம் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x