Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

மருத்துவ சிகிச்சை முறையாக மாற்றவும் பரிசீலனை அக்குபஞ்சருக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

அக்குபஞ்சர் சிகிச்சை முறைக்கு உரிய அங்கீகாரம் அளிப்பது மற்றும் அதை ஒரு மருத்துவ சிகிச்சை முறையாக கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று டி.கே.ரங்கராஜன் கடிதத்துக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில் அளித்துள்ளார்.

மருந்தில்லா இயற்கை சிகிச்சை முறையாகத் திகழும் அக்குபஞ்சர் முறைக்கு இந்தியாவில் அங்கீகாரம் அளிக்கக் கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி டி.கே.ரங்கராஜன் கடந்த ஆண்டு நவ.23-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருந்ததாவது:

அக்குபஞ்சர் என்பது மருந்தில்லா இயற்கை சிகிச்சை முறை.இது தமிழகத்தில் தோன்றிய ஓர்பாரம்பரிய சிகிச்சை முறை. நம் நாட்டில் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய 2 மாநிலங்களைத் தவிர வேறுஎந்த மாநிலத்திலும் அக்குபஞ்சர்சிகிச்சை முறை அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கும் இயற்கை மருத்துவர்கள், கரோனாவால் ஏற்படும்பல்வேறு மருத்துவ பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்கள். சீனாவில்கரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் இருந்தபோது அங்கு அக்குபஞ்சர்சிகிச்சை முறையை கையாண்டதற்கு நல்ல பலன் கிடைத்தது.

நம் நாட்டில் அக்குபஞ்சர் சிகிச்சை முறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டால், அது கரோனா ஒழிப்பில் பெரும் பங்கு வகிக்கும்.அக்குபஞ்சர் இயற்கை மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு இதுவே சரியான தருணம்.

இவ்வாறு கடிதத்தில் டி.கே.ரங்கராஜன் கூறியிருந்தார்.

அவரது கடிதத்துக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில் எழுதியுள்ளார். அதில், ‘‘தங்களின் கோரிக்கையை ஆராய்ந்தேன். ஒருசிகிச்சை முறை என்ற வகையில்அக்குபஞ்சர் சிகிச்சை முறைக்குஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பதிவுபெற்ற மருத்துவர்கள், அவர்கள் நவீன மருத்துவர்களோ அல்லது ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) மருத்துவர்களாகவோ, பல் மருத்துவர்களாகவோ இருப்பின், அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான பயிற்சியை பெற்ற பின்னர் அம்முறையை பின்பற்றி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏன், பிசியோதெரபிஸ்ட்கள்கூட அக்குபஞ்சர் பயிற்சி பெற்று அதைப் பின்பற்றி சிகிச்சை அளிக்கலாம். அக்குபஞ்சர் சிகிச்சை முறையை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவது மற்றும் அதற்கு உரிய அங்கீகாரம் அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது’’ என்று குறிப் பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x