Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தருமபுரி

குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை ரத்து செய்யக் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொம்மிடி அடுத்த கொண்டகரஅள்ளி ஊராட்சி பகுதியில் தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் பயனாளிகள் சிலருக்கு கொண்டகர அள்ளி பகுதியில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டது. நீண்ட ஆண்டுகளாகியும் அப்பகுதியில் யாரும் வீடு கட்டாத நிலையில் அந்த இடம் மற்றும் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடம் ஆகியவற்றை தேர்வு செய்து அரசு தற்போது அடுக்கு மாடி குடியிருப்பு கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது.

வீட்டுமனை பெற்று பல ஆண்டுகள் ஆனபோதும் பொருளாதார சூழலால் பயனாளி களால் அங்கு வீடுகளை கட்ட முடியவில்லை.

இந்நிலையில், அந்த இடத்தை அரசு புதிய திட்டத்துக்காக எடுத்துக்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை ரத்து செய்துவேறு இடத்தை தேர்வு செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பயனாளிகள் பலரும் நேற்று கொண்டகர அள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x