Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 266 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தகவல்

நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 266 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக நாகை ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தெரி வித்துள்ளார்.

நாகை ஒன்றியம் பாலையூர், சங்கமங்கலம் ஆகிய கிராமங்களில் தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களை சென்னை வேளாண்மை துறை மாநில திட்டங்கள் இணை இயக்குநர் வேலாயுதம் தலைமையிலான குழுவினருடன் இணைந்து ஆட்சி யர் பிரவீன் பி.நாயர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர், ஆட்சியர் கூறியதாவது:

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை காரண மாக 82,385 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதில், பாதிக்கப்பட்ட 1.45 லட்சம் விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணத் தொகை வழங்கும் பணி கடந்த 7-ம் தேதி தொடங்கி, இதுவரை 1.29 லட்சம் விவசாயி களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக் கப்பட்டுள்ளது. மீதியுள்ள 16 ஆயிரம் விவசாயிகளுக்கு ஒரு வாரத்துக்குள் இடுபொருள் நிவாரணத் தொகை வழங்கப்படும். மேலும், 1,200 இடங்களில் அறுவடை பணிகளை காப்பீட்டு நிறுவனம் கள ஆய்வு செய்து வருகிறது.

நாகை மாவட்டத்தில் 111, மயிலாடுதுறை மாவட்டத்தில் 155 என மொத்தம் 266 நேரடி நெல் கொள்முதல் நிலையங் கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயி களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு தயாராக உள்ளது என்றார்.

ஆய்வின்போது, மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் கல்யாணசுந்தரம், துணை இயக்குநர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x