Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரான மருத்துவர் வி.சாந்தா உடல்நலக் குறைவால் காலமானார் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரான மருத்துவர் வி.சாந்தா, உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 93. முதல்வர் பழனிசாமி உத்தரவுப்படி, போலீஸார் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சாந்தாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா உடல்நலக் குறைவால் சென்னை அப் போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அடையாறு காந்தி நகர் பகுதியில் உள்ள பழைய புற்றுநோய் மருத்துவ மனையில் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக சாந்தாவின் உடல் வைக்கப் பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநக ராட்சி ஆணையர் பிரகாஷ், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் எம்.பி., ஜெயவர்தன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கராத்தே தியாகராஜன், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன், அப் போலோ மருத்துவமனைகள் குழும துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி, நடிகர்கள் விவேக், சித்தார்த் மற்றும் மருத் துவர்கள், செவிலியர்கள், பொதுமக் கள், அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று குண மடைந்தவர்கள் உட்பட ஏராளமானோர் சாந்தாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சாந்தாவின் உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாலை 5 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் வாகனத்தில் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

காவல் துறையினர் 72 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் சாந்தாவின் உடல் மாலை 6.15 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது.

சடங்குகள் வேண்டாம்

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, ‘எனது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. எதிர்பாராத சம்பவங்கள் நடந்தாலும், மருத்துவமனை விடுமுறை இல்லாமல் வழக்கம்போல் செயல்பட வேண்டும். இறுதிச் சடங்குகள் எதுவும் செய்ய வேண்டாம்’ என்று சக மருத்துவர்களிடம் சாந்தா கேட்டுக் கொண்டார். அவரது விருப்பப்படி, எந்த சடங்குகளும் செய்யாமல் உடல் தகனம் செய்யப்பட்டது. மருத்துவ மனையும் நேற்று வழக்கம்போல் செயல்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x