Published : 19 Jan 2021 06:49 AM
Last Updated : 19 Jan 2021 06:49 AM

பரபரப்பானது பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி இந்திய அணி வெற்றிக்கு 328 ரன்கள் இலக்கு

கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியஅணிக்கு 328 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி.

பிரிஸ்பனில் நடந்து வரும் இந்தடெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களும், இந்திய அணி 336 ரன்களும்எடுத்தன. 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி,3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது. நேற்று 4-வது நாள் ஆட்டத்தை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்து அனைத்துவிக்கெட்களையும் இழந்தது.

மார்கஸ் ஹாரிஸ் 38 ரன்களில் ஷர்துல் தாக்குர் பந்திலும், டேவிட்வார்னர் 48 ரன்களில் வாஷிங்டன்சுந்தர் பந்திலும் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர்சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்களை இழந்தது. மார்னஸ் லபுஷேன் 25, ஸ்டீவ் ஸ்மித் 55, மேத்யூ வேட் 0, மிட்செல் ஸ்டார்க் 1, ஜோஸ்ஹேசல்வுட் 9ரன்களில் மொகமது சிராஜ் பந்தில்வெளியேறினர். கேமரூன் கிரீன் 27, கேப்டன் டிம் பெய்ன் 27, நேதன் லயன் 13 ரன்களில் ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் நடையைக்கட்டினர். பாட் கம்மின்ஸ் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடைசி 3 விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய அணி 51 ரன்கள் சேர்த்தது. இதன் காரணமாகவே ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கும் மேலான இலக்கை கொடுக்க முடிந்தது. இந்திய அணி சார்பில் மொகமது சிராஜ் 5, ஷர்துல் தாக்குர்4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 328 ரன்கள் இலக்குடன் பேட் செய்ய தொடங்கிய இந்திய அணி 1.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக 4-வதுநாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ரோஹித் சர்மா 4 ரன்களுடனும் ஷுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். கைவசம் 10 விக்கெட்டுகள் இருக்க வெற்றிக்கு 324 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை விளை யாடுகிறது இந்திய அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x