Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

கோவிட்-19 சலுகை நடவடிக்கையாக 56.79 லட்சம் இபிஎப் சந்தாதாரர்களுக்குடிசம்பர் வரை ரூ.14 ஆயிரம் கோடி விடுவிப்பு

தொழிலாளர் ஈட்டுறுதி வாரியம் (இபிஎப்) மூலம் கரோனா வைரஸ்’முன்பணமாக 56.79 லட்சம் சந்தாதரர்களுக்கு டிசம்பர் வரையானகாலத்தில் ரூ.14 ஆயிரம்கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 சலுகை கால முன்பணமாக, பணியாளர்களுக்கு இபிஎப்ஓ அலுவலகம் விடுவித்தது ஐந்தில் ஒரு பங்கு அளவாகும். பணியாளர்களின் ஓய்வூதிய நிதியத்தை நிர்வகிக்கும் இபிஎப்ஓ திரும்ப செலுத்த அவசியமில்லாத முன்பணமாக கரோனா வைரஸ் காலத்தில் பணியாளர்கள் கணக்கிலிருந்து பணத்தை முன்பணமாக விடுவித்து வருகிறது. டிசம்பர் 31, 2020 வரையான காலத்தில் மொத்தம் ரூ.14,310 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இபிஎப்ஓ அலுவலகம் 197.91 லட்சம் கணக்குகளில் இறுதி பணப்பட்டுவாடா செய்துள்ளது. அதாவது உறுப்பினர்கள் உயிரிழப்பு, காப்பீடு, முன்பணம் போன்றவற்றுக்கு ரூ.73,288 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பிஎம்ஜிகேஒய்) எனும் திட்டம் மார்ச் 26-ம் தேதி 2020-ல்செயல்படுத்தப்பட்டது. இபிஎப் மூலம் ஊழியர்கள் தங்களது அடிப்படை சம்பளத்தில் 3 மாத தொகை அல்லது அவர்களது கணக்கில் உள்ள தொகையில் 75 சதவீதம் வரை எடுக்க வழியேற்படுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x