Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM

மேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும்

மேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்களிடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.ரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கடன் தொகை வசூலாகும். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார்.மிதுனம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ உத்தரவாதமோ தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். கலைப்பொருட்கள் சேரும்.கடகம்: புது வாகனம் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் பளிச்சிடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசியல் பிரமுகருடன் நட்பு ஏற்படும். கலைப்பொருட்கள் சேரும்.கன்னி: உறவினர்களின் கனிவான பேச்சு ஆறுதலைத் தரும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மனைவிவழி உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.துலாம்: பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். கடனை பைசல் செய்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய ஈகோ பிரச்சினை தீரும். திடீர் பயணம் ஏற்படலாம்.விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் பேச்சில் சாதுர்யம் வெளிப்படும். விஐபிகளால் பாராட்டப்படுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.தனுசு: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொந்தபந்தங்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.மகரம்: உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். பேச்சில் நிதானம் அவசியம். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.கும்பம்: வறட்டுக் கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். வேலைச்சுமை, எதிர்பாராத பயணங்கள் ஏற்படக் கூடும். பணப் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.மீனம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x