Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

சேலத்தில் 46 மினி கிளினிக் தொடக்கம்: ஆட்சியர் தகவல்

சேலம்: சேலம் மாவட்டத்தில் 46 இடங்களில் மினி கிளினிக்கள் தொடங்கி வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 100 அம்மா மினி கிளினிக்குகளை தொடங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கெங்கவல்லி சட்டப்பேரவை தொகுதியில் சின்னக்கரட்டூர், மாயம்பாடி, லத்துவாடி, காமக்காப்பாளையம் உட்பட மாவட்டம் முழுவதும் 46 இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 54 மினி கிளினிக்குகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள அனைத்து மருந்துகளும் மினி கிளினிக்கிலும் வைக்கப்பட்டுள்ளது.

நகரம் மற்றும் கிராமப் பகுதியில் வாழும் மக்கள் அந்தந்தப் பகுதியிலேயே உள்ள அம்மா கிளினிக்குக்கு சென்று காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளாலம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x