Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு பெற அழைப்பு

சேலம்: சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்கும் பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சிறப்பு சாலைகள் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சேலம் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி பகுதிகளில் புதிதாக சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிய சாலை அமைக்கப்படவுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக மற்றும் தொழிற்சாலைகள் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வசதி இதுவரை இல்லாதவர்களும், புதிதாக கட்டுமானங்கள் கட்ட திட்டமிட்டு உள்ளவர்களும் உடனடியாக மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பித்து முறையாக இணைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சாலை மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர், சாலைகள் சேதம் அடைவதை தவிர்க்கும் வகையில் புதிதாக சாலை அமைக்கப்பட்ட பகுதிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு அனுமதி வழங்க இயலாது. எனவே, இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x