Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

தமிழகத்தில் கரோனா பரவல் குறைய வலுவான சுகாதார கட்டமைப்பே காரணம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெருமிதம்

தமிழகத்தில் உள்ள வலுவான சுகாதார கட்டமைப்பே கரோனா பரவல் குறைவதற்கு காரணம் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஜன.16-ம் தேதி மருத்துவத் துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி இடப்படவுள் ளது. அதன்படி, திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களுக்கு விநியோகிக்க திருச்சி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல தடுப்பூசி மையத்துக்கு நேற்று 68,800 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தன.

அவற்றை மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழகத்தில் முதல் கட்டமாக ஜன.16-ம் தேதி முன்களப் பணியாளர்கள் 6 லட்சம் பேருக்கு, 307 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இடுவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. ஒரு குப்பியில் 5 மி.லி வீதம் தடுப்பூசி மருந்து இருக்கும். ஒருவருக்கு 0.5 மி.லி வீதம் தடுப்பூசி மருந்து இடப்படும்.

மது அருந்தக் கூடாது

தொடர்ந்து, 28 நாட்களுக்குப் பிறகு 2-வது முறையாக மீண்டும் தடுப்பூசி இடப்படும். அதன்பின், 14 நாட்களுக்குப் பிறகுதான், அதாவது முதல் தடுப்பூசி போடப்பட்டு 42-வது நாளுக்குப் பிறகு தான் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் காலத்தில் மது அருந்தக் கூடாது.

கரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிப்பு 1.2 சதவீதமாக குறைவு

தமிழக அரசின் தொடர் நடவ டிக்கை காரணமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. தமிழகத்தில் 10 சதவீதமாக இருந்த கரோனா பாதிப்பு விகிதம் தற்போது 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. இது, பிற மாநிலங்களில் 3 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் வலுவான சுகாதார கட்டமைப்பு இருப்பதாலேயே இது சாத்திய மாயிற்று என்றார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா, மருத்துவம்- ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் லட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணி, துணை இயக்குநர் (காசநோய்) சாவித்திரி, உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா, மாநகராட்சி நகர்நல அலுவலர் யாழினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தடுப்பூசி எண்ணிக்கை

மத்திய மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களுக்கு ஒதுக்கப் பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி எண்ணிக்கை விவரம்:

திருச்சி- 17,100, புதுக்கோட்டை- 3,800, அறந்தாங்கி- 3,100, பெரம்பலூர்- 5,100, அரியலூர்- 3,300, கரூர்- 7,800, தஞ்சாவூர்- 15,500, திருவாரூர்- 6,700, நாகப்பட்டினம்- 6,400.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x