Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட் டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.

மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண்மை சட்டங்களை திரும் பப் பெற வேண்டும். வேளாண் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், வேளாண் சட்டங் களுக்கு இடைக்கால தடை என்பது உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் இணைந்து நடத்தும் நாடகம் எனக் கூறி அதை கண்டித்தும், வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் போகிப் பண்டிகை நாளில் வேளாண் சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்துவது என்று பல்வேறு அமைப்புகள் அறிவித்திருந்தன.

அதன்படி, தஞ்சாவூர் ரயிலடியில் விவசாயிகள் போராட்டக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமையில் மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் காளியப்பன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரமோகன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.கே.செல்வகுமார், மகஇக மாநகரச் செயலாளர் ராவணன், ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அரவிந்தசாமி உள்ளிட்டோர் காவல்துறையின் தடையை மீறி சட்ட நகலை எரித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஒரத்தநாடு ஒன்றியம் தென் னமநாட்டில் நடைபெற்ற வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் தலைமையில், அனைத்துக் கட்சியினர் கலந்துகொண்டனர்.

புத்தூர் நடுபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமையிலும், பூதலூரில் சமவெளி விவசாயிகள் இயக்கம் பழனிராசன் தலைமையிலும், பேராவூரணியில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம் தலைமையிலும், திருவையாறில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.ராம் தலைமையிலும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில்...

திருச்சி தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில் மகஇக மாவட்டச் செயலாளர் ஜீவா, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் உள்ளிட்டோர் நேற்று வேளாண் சட்ட நகல்களை எரித்தனர். இதையடுத்து, 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, திருச்சி அரவனூர் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ராஜா தலைமையிலும், திருச்சி காஜாபேட்டை பகுதியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் ஹரிசந்திரன் தலைமையிலும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின் வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் கோட்ட நிர்வாகி நடராஜன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

திருவாரூர் மாவட்டத்தில்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, மணலி உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கருப்பு கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம், சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், விவசாய சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில்...

மயிலாடுதுறை மாவட்டம் கொள் ளிடத்தை அடுத்த தேவநல்லூர் கிராமத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் சார்பில், மாவட்டச் செயலாளர் செந்தில் தலைமையில் வேளாண் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.சி.சோமையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். கீரமங் கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன் உள்ளிட்டோரும், திருமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமை யன் உள்ளிட்டோரும், தீத்தான்விடுதியில் விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.பொன்னுசாமி உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x