Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

உயிரினங்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்தால் நோய் தொற்றில் இருந்து நம்மை காக்கலாம் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்

உலகில் உள்ள உயிரினங்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்தால் கரோனா போன்ற தொற்று பேரிடர்களில் இருந்து நம்மை தற்காக்கமுடியும் என்று துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை., வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலை. இணைந்து, ‘கரோனாதொற்றை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் காணொலியில் நேற்று நடந்தது.

இதில் திருவள்ளுவர் பல்கலை. துணைவேந்தர் தாமரைசெல்வி, வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி, மருத்துவப் பல்கலை. நோய் பரவியல் துறைத் தலைவர் மருத்துவர் னிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக கருத்தரங்கைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் சுதா சேஷய்யன் பேசியதாவது:

கரோனா வைரஸ் தொற்றால் உலகின் இயக்கம் ஓராண்டாக ஸ்தம்பித்துப் போனது. அந்த அளவுக்கு இடர்பாடுகளைத் தந்தகரோனாவை ஒழிக்க அரும்பாடுபட்டு அதில் இப்போது ஏறத்தாழ வெற்றியும் பெற்றிருக்கிறோம்.

எபோலா வைரஸ் பரவியதற்குகாடுகளை அழித்ததுதான் காரணம் என பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவித்தன. அதில் உள்ள உண்மையை நாம் மறுக்க முடியாது.இயற்கையை சூறையாடிவிட்டு ஆரோக்கியத்தை வளர்க்க ஒருபோதும் முடியாது. மரங்களில் தொடங்கி மண்ணில் உள்ள அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்தில்தான் அது இரண்டறக் கலந்துள்ளது.

உலகில் உள்ள உயிரினங்களின் ஒருமித்த ஆரோக்கியத்தை உறுதி செய்தால் மட்டுமே நோய்தொற்று போன்ற பேரிடர்களிலிருந்து நம்மை தற்காக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x