Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வுக்கு ஹால்டிக்கெட்

நாடு முழுவதும் உள்ள 33 சைனிக்பள்ளிகளில் 2021-22 கல்வி ஆண்டில் 6, 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வு ஜன.10-ல் நடக்க இருந்தது. நிர்வாக காரணங்களால் தேர்வு பிப்.7-க்கு தள்ளி வைக்கப்பட்டது.

விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு தற்போதுஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் https://aissee.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இணையதளத்தில் (www.nta.ac.in) அறிந்து கொள்ளலாம். சந்தேகங்கள் இருப்பின் 0120 6895200 என்ற எண் அல்லது aissee@nta.ac.in மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x