Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

புதுச்சேரி தீயணைப்புத் துறை விவரங்களை அறிய இணையதளம்

புதுச்சேரி

புதுச்சேரி தீயணைப்பு துறையின் விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக புதிய இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி இணையதள முகவரியை தொடங்கி வைத் தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, எம்எல்ஏ தீப்பாய்ந்தான் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

'fire.py.gov.in' என்ற இந்த இணையதள முகவரியில் தீய ணைப்பு துறையின் வரலாறு, தீயணைப்பு நிலையங்களின் விவரங்கள், தொடர்பு கொள்வதற்கான எண்கள், சேவை விவரங்கள், தீய ணைப்பு வாரம் கொண்டாடுவதன் நோக்கம், ஊழியர்களின் விவரங் கள், வாகனங்கள் மற்றும் சாதனங்களின் விவரங்கள், மக்கள் சாசனம்,வரைபடம், புகைப்படத் தொகுப்பு, துறையின் செயல்பாடுகள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பொதுத் தகவல் அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் முதல் மேல்முறையீட்டு அதிகாரியின் விவரங்கள் ஆகியவை வழங்கப்பட் டுள்ளன.

இந்த இணையதள முகவரியின் மூலம் மக்கள் தீயணைப்புத் துறைப் பற்றி அறிந்து கொள்ள வும், வரும் காலங்களில் தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் பெற விண்ணப்பிப் பதற்கும் இந்த தகவல்கள் உப யோகமாக இருக்கும் என்று அதி காரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x