Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

கரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் பாதுகாப்புக்கென கரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்து தெரிவித்தது: கரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கென முன்னேற்பாடாக பயனாளிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 2,046 அரசு பணியாளர்கள், 1,036 தனியார் பணியாளர்கள் என மொத்தம் 3,082 பேரின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கரோனா தடுப்பூசியை சரியான குளிர்ப்பதன நிலையில் பராமரிப்பதற்காக 105 லிட்டர் கொள்ளளவு கொண்ட குளிர்பதனப் பெட்டி தயார் நிலையில் உள்ளது. இதன் மூலம் 22,050 மருந்துகளை பாதுகாக்க முடியும். இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 443 பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை நடத்துவதற்கான ஒத்திகை, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, உடையார்பாளையம் அரசு மருத்துவமனை, குமிழியம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், அரியலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஏ.எஸ்.நர்சிங்ஹோம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே இடங்களில் முதற்கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்றார்.

கூட்டத்தில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சி.ஹேமசந்த்காந்தி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, முதன்மை மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x