Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

உணவகத்தை சூறையாடிய 3 இளைஞர்கள் கைது

ஆர்டர் செய்த உணவு நீண்ட நேரமாகியும் வராததால், உண வகத்தை அடித்து நொறுக்கி சூறையாடிய 3 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன்(35). இவர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மாதனூர் அடுத்த குளிதிகை பகுதியில் உணவகம் (தாபா) ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு உணவகத்துக்கு 3 இளைஞர்கள் சாப்பிட வந்தனர். பின்னர், 3 பேரும் பிரைட்ரைஸ் ஆர்டர் செய்தனர். நீண்ட நேரமாகியும் பிரைட்ரைஸ் வரவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் உணவக ஊழியர்களிடம் தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆவேசமடைந்த 3 இளைஞர்களும் ஒன்று சேர்ந்து உணவக ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். இதைக்கண்ட உணவக மேலாளர் அனீஷ் அங்கு வந்து விசாரணை செய்தார்.

அதற்குள்ளாக இளைஞர்கள் தங்களது நண்பர்களுக்கு போன் செய்து அங்கு வரவழைத்தனர். இதையடுத்து, 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து உணவகத்தில் இருந்த நாற்காலி, மேஜை, சமையல் பாத்திரங்களை அடித்து நொறுக் கினர். சமையல் செய்யப்பட்ட உணவுப் பொருட் களை தூக்கி நடுரோட்டில் வீசி விட்டு உணவக ஊழியர்களை மிரட்டி விட்டு சென்றனர்.

இது குறித்து உணவக உரிமையாளர் முத்துக்குமரன் நேற்று ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உண வகத்தில் இருந்து சிசிடிவி கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

இதில், தகராறில் ஈடுபட்டவர்கள் ஆம்பூர் அடுத்த மராட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அன்பு ராஜ் (30), காந்த்(28), வெங்கடேசன்(29) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 3 பேரையும் கிராமிய காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 12 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x