Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கடல் பகுதிகளில் செயற்கையாக பதிக்கப்பட்ட பவள பாறைகளின் பயன்பாடுகள் ஆய்வு

சென்னை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கடல் பகுதிகளில் பதிக்கப்பட்ட செயற்கை பவள பாறைகளின் பயன்பாடுகளை மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மீன்கள் மற்றும் கடலில் உள்ள இதர உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், இனப்பெருக்கத் தளமாகவும் செயற்கை பவளப் பாறைகள் விளங்கி வருகிறது. எனவே, கடலில் மீன்வளத்தை மேம்படுத்த தமிழகம் முழுவதும் கடல் பகுதிகளில் செயற்கை பவள பாறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட கடல்பகுதிகளில் செயற்கை பவளப் பாறைகளை அமைக்க மீன்வளத் துறை முடிவு செய்தது. மத்தியகடல்சார் ஆராய்ச்சி நிறுவனவிஞ்ஞானிகள் தலைமையிலான குழுவினர் மூலம் செயற்கைபவளப் பாறைகளைப் பதிப்பதற்கான இடங்கள் கண்டறியப்பட்டன.

மீன்வளத் துறை விளக்கம்

இதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட கடல் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் செயற்கை பவளப் பாறைகள் பதிக்கப்பட்டன. இந்நிலையில், செயற்கை பவளப் பாறைகளின் பயன்பாடுகளை ஆய்வு செய்யும் பணியில் மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மீன்கள் மற்றும் கடலில் இள்ள இதர உயிரினங்களுக்கு செயற்கை பவளப் பாறைகள் வாழ்விடமாகவும், இனப்பெருக்கத் தளமாக பயன்படுகிறதா என்றுகண்டறியும் பணியில் மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை ஆய்வு செய்து செயற்கை பவளப் பாறைகளின் பயன்கள் கண்டறியப்பட உள்ளது. அதன் அடிப்படையில், பிற கடல் பகுதிகளில் செயற்கை பவள பாறைகள் பதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x