Published : 11 Jan 2021 03:24 AM
Last Updated : 11 Jan 2021 03:24 AM

407 ரன் இலக்காக நிர்ணயித்தது ஆஸி. இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்ப்பு வெற்றிக்கு 309 ரன்கள் தேவை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது.

சிட்னியில் நடைபெற்று வரும்இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களும், இந்திய அணி 244 ரன்களும் எடுத்தன. 94 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி நேற்று 4-வது நாள் ஆட்டத்தில் 312 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து 407 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்தியஅணியில், ஷுப்மன் கில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து புஜாரா களமிறங்கினார். சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 98 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் வீசிய பந்தை பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் அடித்த போது மிட்செல் ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து கேப்டன் அஜிங்க்ய ரஹானே களமிறங்கினார். 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 34 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது.

சேதேஷ்வர் புஜாரா 9, அஜிங்க்ய ரஹானே 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு 309 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை விளையாடுகிறது இந்திய அணி.

ஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிஏடிகே மோகன் பகான் – மும்பை

நேரம்: இரவு 7.30

இடம்: கோவாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x