Published : 11 Jan 2021 03:27 AM
Last Updated : 11 Jan 2021 03:27 AM

வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் விவரங்களை தனிப்பதிவேடாக பராமரிக்க வேண்டும் விஏஓ-க்களுக்கு ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு

வேலை நிமித்தமாக வெளிநாடு களுக்கு சென்றவர்களின் விவரங் களை தனிப்பதிவேடாக பராமரிக்க வேண்டுமென திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து வேலை நிமித்தமாக வெளி நாடுகளுக்கு சென்றவர்களின் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களில் சிலர் முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமலும், தவறான முகவர்களால் ஏமாற் றப்பட்டு வாழ்க்கையை இழக் கின்றார்கள்.

இதை தவிர்க்கும் வகையில் அகதிகள் மறுவாழ்வு, தமிழகத் துக்கு வெளியில் வசிக்கும் தமிழர்கள் ஆணையரகத்தில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வை அனைத்துத் துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட நல அலுவலராக ஆட்சியரின் நேர்முக உதவி யாளரும், மாவட்ட நல மையமாக குற்றவியல் பிரிவும் செயல்படும். வெளிநாடுகளுக்கு செல்வோர் அல்லது சென்றவர்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், இந்த அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், குடியரசு தினத்தில் நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு கிராமத்தில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து தனிப்பதிவேடு ஒன்று பராமரிக்க வேண்டும்.

வெளிநாடு சென்றவர்கள் குறித்த விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் பொதுமக்கள் வழங்க வேண்டும். இது குறித்து மேலும், விவரங்களுக்கு அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம், எழிலகம், சென்னை என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

www.madad.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம். மேலும், விவரங் களுக்கு nrtchennai@tn.gov.in அல்லது nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியி லேயோ அல்லது 044-28525648, 28515288 என்ற தொலைபேசி எண் ணிலோ, மாவட்ட நல அலுவலகம் 04179-222111 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க், ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x