Published : 10 Jan 2021 03:27 AM
Last Updated : 10 Jan 2021 03:27 AM

தருமபுரம் ஆதீனம் நிலத்தில் கட்டிடம் கட்ட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நிலத்தில் வணிக நோக்கில் கட்டிடம் கட்ட தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள சைவ சமய அறக்கட்டளையான தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமாக திருக்கடையூரில் 14 ஆயிரம் சதுர அடியில் ஒரு திருமண மண்டபம் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. தற்போது இந்த நிலத்தில் 3 மாடி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

அறக்கட்டளை நிலம், வணிகநோக்கில் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையை சேர்ந்த சுந்தர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘தருமபுரம் ஆதீன மடம் அறப்பணிகளில் அக்கறை காட்டாமல் வருவாய் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. உரிய அனுமதியின்றி இந்த கட்டிடம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘இது விசாரணைக்கு உகந்ததுஅல்ல’’ என்று கூறி, மனுவைதள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேநேரம், இதுதொடர்பாகஉரிமையியல் வழக்கு தொடர்வதற்கு, இந்த உத்தரவு தடையாக இருக்காது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x