Published : 07 Jan 2021 03:14 AM
Last Updated : 07 Jan 2021 03:14 AM

வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜன.11-ம் தேதி விசாரணை

புதுடெல்லி

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வரும் 11-ம் தேதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 40 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, விவசாயி களுடன் மத்திய அரசு தரப்பில் 7 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இதில் சுமுக முடிவு எட்டப்படாததால் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது.

இந்த சூழலில், வரும் 8-ம் தேதியன்று (நாளை) விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதில், தீர்வு காணப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனினும், விவசாயிகள் தரப்பில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வது பற்றி மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையெனில் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரி வித்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றம் விசாரணை

இந்நிலையில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல் வேறு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறும்போது, "விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஆரோக்கிய மான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் சுமுகமான முடிவு எட்டப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த சூழ்நிலையில், வேளாண் சட்டங் களுக்கு எதிரான மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தால், அது அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை பாதித்துவிடும்" எனக் கூறினார்.

அதேபோல, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “மத்திய அரசு – விவசாய சங்கப் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வரும் 8-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானது. எனவே, அன்றைய தினத்துக்கு இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளி வைக்கக் கூடாது” என வேண்டுகோள் விடுத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள், "விவ சாயிகளின் போராட்டத்தை முடி வுக்குக் கொண்டு வரும் விவ காரத்தில், இதுவரை எந்த முன் னேற்றமும் ஏற்பட்டதாகத் தெரிய வில்லை. எனினும், ஆரோக்கியமான பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்த மனுக்கள் மீதான மறு விசாரணை வரும் 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x