Published : 06 Jan 2021 03:13 am

Updated : 06 Jan 2021 03:13 am

 

Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்சுரானா ஊழியர்களிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை

சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சுரானா நிறுவன ஊழியர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் தங்கம் இறக்குமதி செய்யும் சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 2012-ம் ஆண்டு சோதனை நடத்தி, 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் அதே நிறுவனத்தின் 72 லாக்கர்களில் வைத்து சீலிடப்பட்டது. சமீபத்தில் பார்த்தபோது, அதில் 103 கிலோ தங்கம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடந்த 2012-ல் சோதனை நடத்தப்பட்டபோது, சுரானா நிறுவனத்தின் இயக்குநராக இருந்த விஜய்ராஜ் சுரானாவிடம் சிபிசிஐடி அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள், தற்போது பணியில் இருப்பவர்கள், காவலாளிகள் உட்பட பலரிடம் போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x