Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

புதிய நாடாளுமன்றம் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி

புதிய நாடாளுமன்ற வளாக கட்டிட பணியை மேற்கொள்ள உச்ச நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போதைய நாடாளுமன்றம் 93 ஆண்டுகள் பழமையானது. இடநெருக்கடி உள்ளிட்ட பிரச்சினை களை கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்ற வளாகம் (சென்ட்ரல் விஸ்டா) கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. முதலில் திட்ட மதிப் பீடு ரூ.20,000 கோடியாக இருந் தது. பின்னர் திருத்தி அமைக்கப் பட்ட திட்ட மதிப்பீட்டில் ரூ.11,794 கோடி முதல் ரூ.13,450 கோடியாக குறைக்கப்பட்டது. இந்த புதிய வளாகத்தில் பிரதமர், குடியரசு துணைத் தலைவரின் இல்லங் களும் கட்டப்பட உள்ளன. மக்களவையில் 888 மற்றும் மாநிலங்களவையில்384 இருக்கைகளும் கூட்டுக் கூட்டத்துக்காக 1,224 இருக்கை களும் அமைக்கப்படவுள்ளன. நில நடுக்கத்தை தாங்கும் வகையிலும் 150 ஆண்டுகள் நிலைத்திருக்கும் வகையிலும் கட்டப்படுகிறது.

இதனிடையே புதிய நாடாளு மன்ற வளாகம் சுற்றுச்சூழல், நில வகைப்பாடு விதிகளை மீறி கட்டப்படுவதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் 10 வழக்கு கள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா அமர்வு விசாரித்தது. உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின்பேரில் கடந்த டிச. 10-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்த பின்னணியில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி ஆகியோர் புதிய நாடாளுமன்ற வளாக கட்டிட பணியை மேற்கொள்ள அனுமதி வழங்கினர். இதில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். அவர் "நில வகைப்பாடு மாற்றத்தில் பாரம்பரிய பாதுகாப்பு குழுவிடம் முறையாக ஒப்புதல் பெறப் படவில்லை. சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் திருப்திகரமாக இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்டறியப்பட வேண்டும்" என்று தீர்ப்பில் கூறியிருந்தார்.

பெரும்பான்மை தீர்ப்பு

எனினும் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின்படி புதிய நாடாளுமன்ற வளாகம் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

ஒரு திட்டத்துக்கு பணத்தை செலவிடக்கூடாது. அந்த நிதியை வேறு திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இதேபோல உச்ச நீதிமன்றம் நிர்ணயிக்கும் இடத்தில்தான் அரசு அலு வலகங்கள் செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட முடியாது.

மத்திய அரசின் கொள்கை முடிவுகள் குறித்து நாடாளுமன்ற அவைகளில் விவாதிப்பதே பொருத்தமாக இருக்கும். அரசின் கொள்கைகள், செயல்பாடுகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை மட்டுமே நீதி மன்றம் ஆய்வு செய்ய முடியும்.

புதிய நாடாளுமன்ற வளாகம் கட்ட சுற்றுச்சூழல் துறை அளித்த அனுமதி சட்டப்பூர்வமாக செல் லும். எனினும் கட்டிட பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக பாரம் பரிய பாதுகாப்புக் குழுவின் ஒப்புதலையும் பெற வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத கட்டுமானப் பொருட் களை மட்டுமே பயன்படுத்த வேண் டும். காற்றை சுத்தம் செய்யும் நவீன கோபுரங்களை நிறுவ வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

2022-ல் புதிய நாடாளுமன்றம்

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: தீர்ப்பை வரவேற்கிறோம். கட்டுமா னப் பணியின்போது சுற்றுச்சூழல் விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப் படும். 2022-ல் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது புதிய நாடாளுமன்றம் தயாராகிவிடும். அது புதிய இந் தியாவின் அடையாளமாக இருக் கும். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x