Published : 05 Jan 2021 08:21 AM
Last Updated : 05 Jan 2021 08:21 AM

உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) மற்றும் தேசிய இயற்பியல் ஆய்வு (என்பிஎல்) மையத்தின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி தேசிய அளவியல் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட் டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது தேசிய அணு கால அளவு, பாரதிய நிர்தேஷக் திரவியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். மேலும் தேசிய சுற்றுச்சூழல் தர நிர்ணய ஆய்வகத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.

மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்திய விஞ்ஞானிகள், 2 கரோனா தடுப்பூசிகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ள னர். உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்க உள்ளது.

இந்தியாவின் நேரக்காப்பாள ராக செயல்படும் சிஎஸ்ஐஆர்-என்பிஎல்-க்கு நாட்டின் எதிர் காலத்தை மாற்றி அமைக்கும் கடமை, பொறுப்பு உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தரம், அளவீடு நிர்ணயத்துக்கு வெளிநாடுகளின் தொழில்நுட்பத்தை சார்ந்து இருந்தோம்.

இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இப்போது நமக்கான தரம், அளவீடு நிர்ண யத்தை நாமே முடிவு செய்ய அவ சியம் எழுந்துள்ளது. அளவியல் என்பது அறிவியல் சாதனைகளின் அஸ்திவாரம் ஆகும். அளவியல் இல்லாமல் எந்தவொரு ஆராய்ச்சி யிலும் முன்னேறி செல்ல முடியாது. இன்றைய தினம் பாரதிய நிர்தேஷக் திரவியா திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளோம். இதன்மூலம் உலோகம், தாது, பூச்சிக்கொல்லிகள், மருந்துகள், ஜவுளி ஆகிய துறைகளில் தரமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படு வது உறுதி செய்யப்படும்.

இந்திய விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளை, தொழில்நுட் பங்களை உருவாக்க வேண்டும். இந்த தொழில்நுட்பங்கள் தொழில் துறையின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும். இதற்கு பிரதிபலனாக தொழில் துறையினர், அறிவியல் ஆராய்ச்சிகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும். இவை சரியான பாதையில் சென்றால் புதிய வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கும். இதற்கு சிஎஸ்ஐஆர்-என்பிஎல் வழிகாட்ட வேண்டும்.

சிஎஸ்ஐஆர்-என்பிஎல் உரு வாக்கிய அணு கால அளவு மனித குலத்துக்கு அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது. நானோ நொடியை அளவிடும் அளவுக்கு இந்தியா சுயசார்பை எட்டியுள்ளது. இந்திய நேரம், உலகின் நேர அளவோடு மிக துல்லியமாக ஒத்துப் போகிறது. இந்த சாதனை இஸ்ரோ போன்ற அமைப்புகளுக்கு பேரூதவியாக அமையும். வங்கித் துறை, ரயில்வே, பாதுகாப்பு, சுகாதாரம், தொலைத் தொடர்பு, வானிலை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பயன் அடையும்.

அறிவியல் ஆராய்ச்சி

புதிய கண்டுபிடிப்புகளை உரு வாக்கும் விஞ்ஞானிகளுக்கு அவர் கள் வாழும் காலத்தில் மரி யாதை கிடைக்காமல் போகலாம். ஆனால் அவர்களின் கண்டுபிடிப்பு களுக்கு உலகம் ஒருநாள் நிச் சயம் அங்கீகாரம் வழங்கும். விஞ் ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் கண்டுபிடித்த 'மைக்ரோவேவ் தியரி' அவரது காலத்தில் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியடைய வில்லை. ஆனால் இப்போது ஒட்டு மொத்த வானொலி தகவல் தொடர் பும் அவரது தொழில்நுட்பத்தையே சார்ந்திருக்கிறது.

அறிவியல் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளில் இந்திய இளை ஞர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். பல்வேறு துறைகளின் ஆராய்ச்சிகளில் இந்திய விஞ் ஞானிகள் முன்னேறினால் நாட்டின் அனைத்து தொழில் துறைகளும் முன்னேறும். இதன்மூலம் சர்வதேச அரங்கில் இந்திய பொருட்களின் தரமும் மதிப்பும் உயரும். இந்திய விஞ்ஞானிகள் கர்ம யோகிகள். நாட்டின் 130 கோடி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர்கள் உள்ளனர்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x