Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM

ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் சீன செயலிகள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை

ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் சீனாவைச் சேர்ந்த செயலிகளுக்கு பணம் வரும் வழிகள் குறித்து கண்டறிய அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் செல்போன் செயலி நிறுவனங்களை நடத்தி வருவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சீனாவைச் சேர்ந்த ஜியா யமாவ் (38), யுவான் லூன் (28) கைது செய்யப்பட்டனர். பெங்களூருவில் உள்ள ட்ரூ கிண்டில் டெக்னாலஜி (True Kindle Technology) என்ற நிறுவனத்தின் கீழ் பல்வேறு பெயர்களில் கடன் செயலிகளை சீன நாட்டினர் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

வங்கி சேவைகளை அளிக்கும் தனியார் நிதி நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உரிமங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு உரிமம் பெற்ற பல நிறுவனங்கள் தற்போது செயல்படவில்லை.

இவ்வாறு செயல்படாத நிறுவனங்களை சீன நாட்டினர் கண்டுபிடித்து, இந்தியாவை சேர்ந்தவர்களை வைத்து, பினாமி பெயர்களில் அந்த நிறுவனங்களை வாங்கி, கடன் கொடுக்கும் செயலி நிறுவனங்களாக மாற்றியுள்ளனர். தென் இந்தியாவில் மட்டும் கடன் செயலிகளில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு சீனா நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சீன நிறுவனங்கள் இந்தியாவுக்குள் பண முதலீடுகளை எப்படி கொண்டு வந்தனர். நிதி சேவைகளை அளிக்க மத்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், இந்தியாவில் உள்ள சீன நாட்டின் பினாமி நிறுவனங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x