Published : 02 Jan 2021 03:23 AM
Last Updated : 02 Jan 2021 03:23 AM

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும்

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், வீண் செலவு அதிகரிக்கும். ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும்.மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர் பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.கடகம்: உடல் உஷ்ணம் அதிகரிப்பால் சில அவஸ்தைகள் ஏற்படும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தரவேண்டாம். சொந்த ஊர் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.சிம்மம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் வரும். விலகியிருந்த உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைப்பொருட்கள் சேரும்.விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படக் கூடும். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வேலைக்கான முயற்சியில் தடை, தாமதம் ஏற்படும். தாயாரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.மகரம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவரு வீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் ஒருபடி உயரும். ஆன்மிக பயணம் ஏற்படும்.கும்பம்: சமயோசித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். கடனை செலுத்துவதற்கான வழி பிறக்கும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர் களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x