Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடக்காமல் தடுக்க புதிய நடைமுறை அமல்

டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க பல்வேறு புதியநடைமுறைகள் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் பின்வரும் முக்கிய அறிவுரைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வு நாளில்காலை 9.15 மணிக்குள் தேர்வுக்கூடத்தை சென்றடைய வேண்டும்.இதற்கு முன்பு தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இனி அப்படி இருக்காது. காலை 9.15 மணிக்குப் பிறகுவரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். விடைத்தாள் விவரங் களை பூர்த்தி செய்யவும், விடை களை குறிக்கவும், கருப்பு நிற மை உடைய பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விடைத்தாளில் இரு இடங்களில் கையொப்பமிட்டு பெருவிரல் ரேகையை பதிவுசெய்ய வேண்டும். விடைத்தாளில் உள்ளகேள்விகளில் ஏதேனும் கேள்விக்கு விடை தெரியவில்லை என்றால் விடைத்தாளில் ‘E' என்ற வட்டத்தை கருமையாக்க வேண்டும். விடைத்தாளில் A, B, C, D, E என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும். இந்த எண்ணிக்கை தவறாக இருந்தால்தேர்வர்கள் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து 5 மதிப்பெண் குறைக்கப்படும்.

இந்த கூடுதல் விவரங்களுக்காக ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு நேரம் முடிந்த பின்னர்கூடுதலாக 15 நிமிடம் வழங்கப்படும். அதாவது மதியம் 1 மணி முதல் 1.15 மணி வரை இந்தவேலைகளை செய்து முடித்து விடைத்தாளை தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x