Published : 30 Dec 2020 03:16 AM
Last Updated : 30 Dec 2020 03:16 AM

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாக எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் மீது வழக்கு

புதுடெல்லி

கரோனா பாதிப்பு காரணமாக வங்கி கடன்கள் மீது தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பால், வங்கி கடன் வாங்கியோர் திருப்பி செலுத்துவதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஆகஸ்ட் 31 வரை வாராக் கடனாக அறிவிக்கப்படாத கடன்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை வாராக் கடனாக அறிவிக்கப்பட கூடாது என செப்டம்பர் 3-ல் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

ஆனால், எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் கிரீன்லேண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனக் கடன் கணக்குகளை வாராக்கடனாக அறிவித்து நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என வழக்கும் தொடர்ந்துள்ளது. வங்கி மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், இதனால் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடு கேட்டும் அந்நிறுவனம் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x