Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான செயல்பாடு கேப்டன் விராட் கோலிக்கு சோபர்ஸ் விருது முன்னாள் கேப்டன் தோனிக்கும் ஐசிசி விருது

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர், ஒரு நாள், டெஸ்ட், டி20 வீரர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

சிறந்த கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதுக்கு இந்தியஅணியின் கேப்டன் விராட்கோலி தேர்வு செய்யப்பட் டுள்ளார். சர்வதேச போட்டிகளில் விராட் கோலி அடித்துள்ள 70 சதங்களில் விருதுக்கான காலக் கட்டங்களில் மட்டும் அடித்த சதங்களின் எண்ணிக்கை 66 ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரருக்கான விருதும் விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதான விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் 12,040 ரன்களையும், டெஸ்ட்போட்டிகளில் 7,318 ரன்களையும், டி20 சர்வதேச போட்டிகளில் 2,928 ரன்களையும் குவித்துள்ளார்.

கடந்த 2011-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் ஒரு அங்கமாகவும் கோலி இருந்தார். விருதுக்கான காலக்கட்டத்தில் ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்த ஒரே வீரர் கோலி மட்டும்தான். இதில் 39 சதங்கள், 48 அரை சதங்கள் அடங்கும். சராசரி 61.89 ஆகும்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ‘ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு நாட்டிங்ஹாம் டெஸ்டில் ஒரு வினோதமான ரன் அவுட்டுக்குப் பிறகு இங்கிலாந்து பேட்ஸ்மேன் இயன்பெல்லை திரும்ப அழைத்த செயலுக்காக இந்த விருது தோனி வழங்கப்படுகிறது.

சிறந்த டெஸ்ட் போட்டி வீரராக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் அறிவிக் கப்பட்டுள்ளார்.

எலிஸ் பெர்ரி

மகளிருக்கான கிரிக்கெட் டில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீராங்கனையாக ஆஸ் திரேலியாவின் எலிஸ் பெர்ரி தேர்வாகி உள்ளார். ஒரு நாள் போட்டி, டி20 போட்டிகளின் சிறந்த வீராங்கனை விருது களையும் பெர்ரி தட்டிச் சென்றுள்ளார்.

டி20 போட்டிக்கான சிறந்த வீரருக்கான விருது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிஏடிகே மோகன் பகான் – சென்னையின் எப்சி

நேரம்: இரவு 7.30

இடம்: பம்போலிம்நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x