Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM

ஜஸ்பிரீத் பும்ரா, அஸ்வின் பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

மெல்பர்ன்

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது அபாரமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. ஜோ பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். விரைவாக ரன்கள் சேர்க்க முயன்ற மேத்யூ வேட் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், புஜாராவிடம் பிடிகொடுத்து நடையைகட்டினார். 38 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது.அதன்பின் நிலையில் மார்னஷ்லபுஷேனுடன் இணைந்த டிரெவிஸ் ஹெட் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் ஆஸ்திரேலிய அணி 38 ஓவர்களில் 100 ரன்களை எட்டி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

ஆனால், இதற்கு பும்ரா முட்டுக்கட்டை போட்டார். நிதானமாக விளையாடிய மார்னஸ் லபுஷேன் 132 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது சிராஜ் பந்தில் ஷுப்மன் கில்லின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். இது சிராஜுக்கு முதல் விக்கெட்டாக அமைந்தது.

கடைசியில் 72.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4, அஸ்வின் 3, மொகமது சிராஜ் 2, ஜடேஜா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸ் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் ரன் ஏதும் எடுக்காத நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஷுப்மன் கில் 28, சேதேஷ்வர் புஜாரா 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க 159 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது இந்திய அணி.ஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிகேரளா – ஹைதராபாத்

நேரம்: இரவு 7.30

இடம்: பம்போலிம்நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x